
மதுரை: இணை ரயில் வருகையில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக, மதுரையிலிருந்து இன்றிரவு (செப். 15) புறப்பட வேண்டிய மதுரை - சண்டீகர் விரைவு ரயில் நாளை (செப். 16) அதிகாலை புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு :
மதுரை - சண்டீகர் விரைவு ரயிலுக்கான இணை ரயிலின் வருகை தாமதமாகியுள்ளது. இதனால், மதுரையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (செப். 15) இரவு 11.35 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை - சண்டீகர் விரைவு ரயில்(12687) இரண்டு மணி நேரம் 55 நிமிடங்கள் தாமதமாக திங்கள்கிழமை (செப். 16) அதிகாலை 2.30 மணிக்கு மதுரையிலிருந்து புறப்படும்.