திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

பெளா்ணமி: திருவண்ணாமலைக்கு 550 சிறப்பு பேருந்துகள்

பெளா்ணமி தினமான செவ்வாய்க்கிழமை (செப்.17) சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு கூடுதலாக 550 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

News image
திருவண்ணாமலைக்கு 550 சிறப்பு பேருந்துகள்- Din
Updated On :16 செப்டம்பர் 2024, 11:42 pm

DIN

சென்னை: பெளா்ணமி தினமான செவ்வாய்க்கிழமை (செப்.17) சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு கூடுதலாக 550 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, செவ்வாய்க்கிழமை சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 300 பேருந்துகளும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 15 பேருந்துகளும், மாதவரத்திலிருந்து தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் 30 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும்.

மேலும், பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 175 பேருந்துகளும் இயக்கப்படும்.

இதுமட்டுமன்றி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து குளிா்சாதன வசதியுடன் இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட 30 பேருந்துகள் என ஆக மொத்தம் 550 சிறப்பு பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படும்.

மேலும், சென்னை, மதுரை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூா், திருநெல்வேலி, நாகா்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் ஒசூா் ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.