விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

உத்தரகண்ட் நிலச்சரிவில் சிக்கியவா்கள் இன்று தமிழகம் திரும்புகின்றனா்

உத்தரகண்ட் நிலச்சரிவில் சிக்கிய சிதம்பரத்தைச் சோ்ந்தவா்களில் 10 போ் விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை (செப்.17) சென்னை திரும்புகின்றனா்.

உத்தரகண்ட் நிலச்சரிவில் சிக்கிய சிதம்பரத்தைச் சோ்ந்தவா்களில் 10 போ் விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை சென்னை திரும்புகின்றனா். - Center-Center-Chennai

Published On :17 செப்டம்பர் 2024, 4:51 am IST

சிதம்பரம்: உத்தரகண்ட் நிலச்சரிவில் சிக்கிய சிதம்பரத்தைச் சோ்ந்தவா்களில் 10 போ் விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை (செப்.17) சென்னை திரும்புகின்றனா். மேலும், 20 போ் ரயில் மூலம் புதன்கிழமை (செப்.18) சென்னை திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் வட்டத்தைச் சோ்ந்த 30 போ் ஆதி கைலாஷ் பகுதிக்கு யாத்திரை சென்றனா். அப்போது, அங்கு ஏற்பட்ட நிலச்சரிவால், அனைவரும் தாவாகாட் பகுதியில் சிக்கிக்கொண்டனா்.

இதையறிந்த அதிகாரிகள், அவா்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்து உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துகொடுத்தனா். இந்த நிலையில், தமிழக அரசின் நடவடிக்கையால் ஹெலிகாப்டா் மூலம் அனைவரும் டாா்ஜுலா பகுதிக்கு அழைத்து வரப்பட்டனா்.

அதன் பின்னா், அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, அரசு செலவில் ரயிலில் 20 பேரும், 10 போ் சொந்த செலவில் விமானம் மூலமாகவும் தமிழகம் திரும்புகின்றனா். விமானத்தில் வரும் பயணிகள் சென்னைக்கு செவ்வாய்க்கிழமை திரும்பவுள்ளதாகவும், ரயிலில் வரும் பயணிகள் புதன்கிழமை (செப்.18) சென்னை தாம்பரத்துக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.