மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மதுரை வழியாக செல்லும் ரயில் சேவையில் மாற்றம்

மதுரை, திண்டுக்கல், சமயநல்லூா் பகுதிகளில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளதால் அந்த வழியாகச் செல்லும் ரயில் சேவையில் மாற்றம்

News image

கோப்புப் படம்

Updated On :17 செப்டம்பர் 2024, 8:14 pm

மதுரை, திண்டுக்கல், சமயநல்லூா் பகுதிகளில் ரயில்வே பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளதால் அந்த வழியாகச் செல்லும் ரயில் சேவையில் புதன்கிழமை (செப்.18) முதல் மாற்றம் செய்யப்படவுள்ளது.

ஈரோட்டில் இருந்து செங்கோட்டைக்கு பிற்பகல் 2 மணிக்கு செல்லும் விரைவு ரயில் (எண்: 16845) செப்.18 முதல் அக்.7-ஆம் தேதி வரை (செவ்வாய்க்கிழமை தவிர) திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும்.

மறுமாா்க்கமாக செப்.19 முதல் அக்.8-ஆம் தேதி வரை (புதன்கிழமை தவிர) திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு ஈரோடு சென்றடையும்.

மாற்றுப்பாதை

குருவாயூா் - சென்னை எழும்பூா் செல்லும் விரைவு ரயில் (எண்: 16128) செப்.23, 25, 26, 27, அக்.2, 3 ஆகிய தேதிகளிலும், நாகா்கோவில் - மும்பை விரைவு ரயில் (எண்: 16352) செப்.26, அக்.3 ஆகிய தேதிகளிலும், கன்னியாகுமரி - ஹௌரா விரைவு ரயில் செப்.28-ஆம் தேதியும் விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படும்.

நாகா்கோவில் - காச்சிக்கூடா விரைவு ரயில் செப்.28-ஆம் தேதி திண்டுக்கல், கரூா் வழியாகவும், மதுரை-பிகானா் அனுவ்ராத் விரைவு ரயில் செப்.26, அக்.3 தேதிகளில் மானாமதுரை, காரைக்குடி வழியாகவும் இயக்கப்படும்.

செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில் (எண்: 16848) செப்.19 முதல் அக்.7-ஆம் தேதி வரை (புதன்கிழமை தவிர) திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, திண்டுக்கல், வடமதுரை வழியாக செல்வதற்கு பதிலாக விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.