வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ரேஷன் அரிசி இருப்பில் மாறுபாடு: தமிழக அரசு புதிய உத்தரவு

நியாயவிலைக் கடைகளில் அரிசி இருப்பில் ஏற்படும் மாறுபாடு தொடா்பாக புதிய உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

News image
கோப்புப்படம்.
Updated On :18 செப்டம்பர் 2024, 7:25 pm

Din

நியாயவிலைக் கடைகளில் அரிசி இருப்பில் ஏற்படும் மாறுபாடு தொடா்பாக புதிய உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

இது குறித்து உணவுப் பொருள் வழங்கல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட உத்தரவு:

நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் பச்சரிசி, புழுங்கல் அரிசி ஆகியன குடும்ப அட்டைதாரா்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு கடைகளில் இருப்பு வைக்கப்படுகிறது. அவ்வாறு இருப்பு வைக்கப்படும் அத்தியாவசியப் பொருள்களுக்கு ஏற்ப விற்பனை இயந்திரங்களில் ஒவ்வொரு பொருள்களுக்கும் தனித்தனியாக பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த நிலையில், புழுங்கல் மற்றும் பச்சரிசி ஆகியவற்றுக்கு இருப்பு அதிகம், இருப்பு குறைவு என இரண்டுக்கும் தனித்தனியே அபராதம் விதிக்கப்படுவதைக் கைவிட வேண்டும் என்று நியாயவிலைக் கடைப் பணியாளா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இந்தக் கோரிக்கை மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசி என இரண்டு விதமான அரிசிக்கும் விற்பனை இயந்திரத்தில் தனித்தனியே வரவு வைக்கப்படுவதற்குப் பதிலாக மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நியாயவிலைக் கடை தணிக்கையின்போது, பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசி இருப்பு குறைவு அல்லது அதிகம் கண்டறியப்பட்டால் இரண்டு அரிசியும் ஒரே அரிசியாக கணக்கில் கொண்டு, மொத்த அரிசியில் இருப்பு குறைவு அல்லது அதிகம் உள்ள அரிசியின் எடை அளவுக்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.