
நிபா வைரஸ் பரவல் காரணமாக, தமிழக - கேரளா எல்லைப் பகுதிகளில் மருத்துவக் குழுவினர் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.
கேரளத்தில், நிபா வைரஸ் காரணமாக ஒரு இளைஞர் பலியான நிலையில், மற்றொருவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் - கேரளா எல்லைகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்து இருந்தது.
அதன்படி கோவை - கேரளா எல்லைப் பகுதியில் அமைந்து உள்ள வாளையார், வேலந்தாவளம், முள்ளி, மீனாட்சிபுரம், மேல்பாவி, கோபாலபுரம், வீரப்ப கவுண்டனூர், நடுப்புனி, ஜமீன்காலியாபுரம், வடக்காடு, செம்மனாம்பதி உள்ளிட்ட 13 சோதனைச் சாவடிகளில் மருத்துவ சுகாதார துறையினர் சிறப்பு தற்காலிக முகாம்களை அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரளத்தில் இருந்து கோவைக்கு வரும் பேருந்து, கார் உள்ளிட்ட வாகனங்களில் வருவோரிடம் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா ? என கேட்டு பரிசோதனை செய்து வருகின்றனர்.
கேரளத்தில் நிபா வைரஸ் பரவி வருவதை அடுத்து கோவை மாவட்டத்தில் உள்ள 13 சோதனைச் சாவடிகளிலும் சுகாதாரக் குழுவினர் நியமிக்கப்பட்ட 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டுமென உத்தரவு பிறப்பித்து உள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் நிபா வைரஸ் அறிகுறியுடன் சிகிச்சைக்கு வரும் நபர்களின் விவரங்களை உடனே அறிவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனை அடுத்து கடந்த சில நாள்களாக மருத்துவக் குழுவினர் தீவிர மருத்துவ பரிசோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.