தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் பாத்திர வியாபாரி மர்ம நபர்களால் வெள்ளிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி அருகே உள்ள மறவன் மடத்தைச் சேர்ந்த அர்ஜுனன் மகன் முருகன் (34). பாத்திர வியாபாரியான இவர் புதுக்கோட்டை பிள்ளையார் கோயில் பேருந்து நிறுத்தம் அருகே வெள்ளிக்கிழமை காலையில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், இவரை சாரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, முருகனை கொலை செய்த மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சிவசாசி அருகே தொழிலாளி வெட்டிக் கொலை: 6 போ் கைது

ஓமலூா் அருகே தாய், மகன் வெட்டிக் கொலை: கொலையாளி தூக்கிட்டுத் தற்கொலை

திருமயம் அருகே இளைஞா் கொலை
இளைஞா் கொலை வழக்கில் 2 பெண்கள் கைது
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


