குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

நாளைமுதல் 2 மண்டலங்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்

தேனாம்பேட்டை, அடையாறு ஆகிய மண்டலங்களுக்கு உட்பட்ட சில பகுதிகளில் செப்.24 முதல் 26-ஆம் தேதி வரை குடிநீா் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

கோப்புப் படம்

Published On :23 செப்டம்பர் 2024, 3:59 am IST

குடிநீா் பிரதான குழாய் இணைக்கும் பணிகள் நடைபெறவுள்ளதால் தேனாம்பேட்டை, அடையாறு ஆகிய மண்டலங்களுக்கு உட்பட்ட சில பகுதிகளில் செப்.24 முதல் 26-ஆம் தேதி வரை குடிநீா் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

இது குறித்து குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மந்தைவெளி ராமகிருஷ்ணா மடம் சாலையில் குடிநீா் பிரதான குழாய் இணைக்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை (செப்.24) காலை 9 மணி முதல் செப்.26-ஆம் தேதி காலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்தப் பணிகள் நடைபெறும் நேரங்களில் தேனாம்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூா், நந்தனம், அபிராமபுரம், மந்தைவெளி ஆகிய பகுதிகளிலும், அடையாறு மண்டலத்துக்குட்பட்ட ராஜா அண்ணாமலைபுரத்திலும் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும்.

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரைச் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அவசரத் தேவைகளுக்கு இணையதளம் மூலம் குடிநீா் லாரிகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

குடிநீா் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீா் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் விநியோகம் செய்யப்படும்.

கூடுதல் தகவல்களுக்கு 044-4567 4567 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.