புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கூவம் ஆற்றை சீரமைக்க செலவிட்ட ரூ. 500 கோடி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: எல்.முருகன்!

சென்னையில் உள்ள கூவம் ஆற்றை சீரமைக்க செலவிடப்பட்ட ரூ. 500 கோடி குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

News image
Updated On :23 செப்டம்பர் 2024, 4:46 am

DIN

சென்னையில் உள்ள கூவம் ஆற்றை சீரமைக்க செலவிடப்பட்ட ரூ. 500 கோடி குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு இன்று (செப். 23) காலை வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை மேயராக இருக்கும்போது சென்னையை சிங்கார சென்னையாக, சிங்கப்பூராக மாற்றுவேன் என கூறினார். ஆனால் தற்போது அவர் முதல்வராகி விட்டார். ஆனால் கூவம் ஆறு சுத்தப்படுத்தப்படவில்லை. இதனை சீரமைக்க ரூ. 500 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளதாகக் கூறுகின்றனர். ஆனால் அந்தப் பணம் கூவத்துக்குள்ளேயே கரைந்து போய்விட்டது.

கூவம் ஆற்றை சீரமைக்க செலவழிக்கப்பட்ட பணம் குறித்து கார்த்தி சிதம்பரம் வெள்ளை அறிக்கை கேட்டு உள்ளார். அதேபோன்று, நானும் தற்போது வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

கூவத்தை சீரமைப்பதற்கு பெரிய திட்டம் வேண்டும். குஜராத்தில் சபர்மதி ஆற்றை பிரதமர் மோடி சீரமைத்து உள்ளார். அதைப் பார்த்து கூவம் ஆற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.