கொளத்தூர் பகுதியில் போக்கு காட்டி வந்த சிறுத்தை உயிரிழந்ததால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் ஒன்றியத்தில் புது வேலமங்கலம், வெள்ளக்கரட்டூர் மற்றும் கருங்கரடு உள்ளிட்ட பகுதிகளில், கடந்த 8ஆம் தேதி முதல் சிறுத்தை ஒன்று கிராமத்தில் நுழைந்து 50 மேற்பட்ட ஆடுகளை வேட்டையாடி வந்தது.
இதனிடையே வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில் இன்று கொளத்தூர் அருகே வனப் பகுதியில் சிறுத்தை மர்மமாக இறந்து கிடந்தது.
இதனைக் கண்ட கிராம மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அதிகாரிகள் இறந்து கிடந்த சிறுத்தையின் உடலை மீட்டு சம்பவ இடத்திலேயே உடற்கூராய்வு செய்தனர். பின்னர் வனப் பகுதியில் தீ வைத்து அடக்கம் செய்தனர்.
பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் போக்கு காட்டி வந்த சிறுத்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை நிம்மதி அடையச் செய்துள்ளது. இருப்பினும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தினப்பலன்கள் - ரிஷபம்

உதகை அருகே தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்

குன்னூா் அருகே சிறுத்தை நடமாட்டம்

பண்ணாரி அருகே சாலையைக் கடந்த சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


