சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராமுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த விழாவில், பேரவைத் தலைவர் அப்பாவு, தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, ரகுபதி உள்ளிட்டோரும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பு வகித்த கே.ஆர்.ஸ்ரீராமை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்திருந்தார்.