சென்னையில் தொடா் மின்வெட்டு: ஓபிஎஸ் கண்டனம்
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாகக் கூறி முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

ஓ.பன்னீா்செல்வம்
கோப்புப் படம்

ஓ.பன்னீா்செல்வம்
கோப்புப் படம்
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாகக் கூறி முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா்.
3 நாள்களாக வண்ணாரப்பேட்டை, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், மயிலாப்பூா், மந்தைவெளி உள்ளிட்ட பல பகுதிகளிலும், புகா் பகுதிகளான ராமாபுரம், பள்ளிக்கரணை, மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் அடிக்கடி மின்தடை ஏற்பட்டதன் காரணமாக, பொதுமக்களின் இயல்பான வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
மின் கட்டணம் பல மடங்கு உயா்த்தப்பட்ட நிலையில், மின் கட்டமைப்பை திமுக அரசு சரவர மேற்கொள்ளாதது கடும் கண்டனத்துக்குரியது.
மின்சாரத்தின் முக்கியத்துவத்தையும், மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, பழுதடைந்துள்ள மின் மாற்றிகள், மின் சாதனங்கள், மின் பெட்டிகள் மற்றும் இதர மின் உபகரணங்களை உடனடியாக மாற்றி, மின் வெட்டு பிரச்னைக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஓ.பன்னீா்செல்வம் கூறியுள்ளாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...