அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு!

அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்ட 4 பேருக்கு துறைகள் ஒதுக்கீடு. 6 பேருக்கு துறைகள் மாற்றியமைப்பு.
பதவியேற்பு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி
பதவியேற்பு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி
Published on
Updated on
1 min read

தமிழக அமைச்சரவையில் புதிதாக அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்ட 4 பேருக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, ராஜேந்திரனுக்கு சுற்றுலாத் துறை

செந்தில் பாலாஜிக்கு மின்சாரத் துறை

கோ.வி. செழியனுக்கு உயர்கல்வித் துறை

சா.மு. நாசருக்கு சிறுபான்மை நலத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறையில் இருந்து வந்த 3 நாள்களில் செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

மதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறையை கவனித்துவந்த முத்துசாமியிடமிருந்து பொறுப்பு பறிக்கப்பட்டு, செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன்மூலம் சிறைக்குச் செல்வதற்கு முன்பு வகித்துவந்த பொறுப்பே செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ளது.

செஞ்சி மஸ்தான் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் அவருக்கு வழங்கப்பட்டிருந்த சிறுபான்மை நலத் துறை சா.மு. நாசருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று பொன்முடியிடம் இருந்த உயர்கல்வித்துறை, முதல்முறையாக அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள கோ.வி. செழியனுக்கு வழங்கப்பட்டுள்ளது. பொன்முடிக்கு வனத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட க.ராமச்சந்திரனிடமிருந்த சுற்றுலாத் துறை ராஜேந்திரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

படிக்க | 4 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!

அமைச்சரவையில் நான்கு போ் சோ்க்கப்படவுள்ள நிலையில், ஏற்கெனவே இடம்பெற்றுள்ள அமைச்சா்களில் 6 பேரின் இலாக்காக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

க.பொன்முடி

உயா்கல்வித் துறைக்கு பதிலாக வனத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

மெய்யநாதன்

சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாறுபாடுகள் துறைக்கு பதிலாக பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா் மரபினா் நலத் துறை வழங்கப்பட்டுள்ளது.

என்.கயல்விழி செல்வராஜ்

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறைக்கு பதிலாக மனிதவள மேலாண்மை மற்றும் முன்னாள் படைவீரா்கள் நலத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

எம்.மதிவேந்தன்

வனத் துறைக்கு பதிலாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை

ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன்

பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா் மரபினா் நலத் துறைக்கு பதிலாக பால்வளம், காதி மற்றும் கிராமத் தொழில்கள் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

தங்கம் தென்னரசு

நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறைக்கு பதிலாக சுற்றுச்சூழல், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பருவநிலை மாறுபாடு மற்றும் தொல்லியல் துறை வழங்கப்பட்டுள்ளது.

படிக்க | சொல்லப் போனால்... செந்தில் பாலாஜியும் 4.34 லட்சம் விசாரணைக் கைதிகளும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com