நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 13,000 கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 9,000 கனஅடியில் இருந்து 13,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

News image

ஒகேனக்கல்.(கோப்புப்படம்)

Updated On :30 செப்டம்பர் 2024, 7:16 am

DIN

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 9,000 கனஅடியில் இருந்து 13,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா் வறுத்து அவ்வப்போது அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.

இந்த நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 9,000 கனஅடியில் இருந்து 13,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

காலை 6 மணிக்கு 9,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையால் அதிகரித்துள்ளது. மேலும் காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

இதனிடையே ஒகேனக்கல்லுக்கு வார விடுமுறை மற்றும் தொடா் விடுமுறை நாள்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா்.

தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் காலாண்டுத் தோ்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் ஞாயிற்றுக்கிழமையில் ஒகேனக்கல்லில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.