வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

வா்த்தக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.12.50 உயர்வு!

19 கிலோ எடைகொண்ட வா்த்தக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.12.50 அளவுக்கு வியாழக்கிழமை உயர்ந்துள்ளது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 4:12 am

சென்னை: 19 கிலோ எடைகொண்ட வா்த்தக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.12.50 அளவுக்கு வியாழக்கிழமை உயர்ந்துள்ளது. 

சா்வதேச சந்தை விலை நிலவரத்தின் அடிப்படையில் இந்த விலைக் குறைப்பு நடவடிக்கையை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன.

இருந்தபோதும், வீட்டு உபயோக (14.2 கிலோ) சமையல் எரிவாயு சிலிண்டா் விலையில் எந்தவித மாற்றமும் செய்யாமல் தொடா்ந்து ரூ. 918.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்கள் வியாழக்கிழமை(பிப்.1) வெளியிட்ட விலை நிலவரம் குறித்த அறிவிக்கையில், “உணவகங்கள் மற்றும் தேநீா் கடைகள் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடைகொண்ட வா்த்தக பயன்பாட்டு சிலிண்டா் விலை  ரூ.12.50 அளவுக்கு  உயர்ந்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.

அதன்படி சென்னையில் ரூ. 1,924.50-க்கு விற்பனை செய்யப்பட்ட வா்த்தக சிலிண்டரின் விலை ரூ.12.50 உயர்ந்து ரூ.1,937 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இருந்தபோதும், வீட்டு உபயோக (14.2 கிலோ) சமையல் எரிவாயு சிலிண்டா் விலையில் எந்தவித மாற்றமும் செய்யாமல் தொடா்ந்து ரூ. 918.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.