தமிழகம் முழுவதும் பொங்கல் கோலாகலமாக கொண்டாட்டம்!

தமிழகம் முழுவதும் பொங்கல் கோலாகலமாக கொண்டாட்டம்!

தமிழ் மாதமான தையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அறுவடைத் திருநாளான தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் புது பானையில் பொங்கலிட்டு உற்சாகமாக பொங்கல் கோலாகலமாக திங்கள்கிழமை க


தமிழ் மாதமான தையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அறுவடைத் திருநாளான தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் புது பானையில் பொங்கலிட்டு உற்சாகமாக பொங்கல் கோலாகலமாக திங்கள்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழர் கலாசார பண்பாட்டு வரலாற்றில் தனியிடம் பெற்றவை பொங்கல் திருநாள். இந்த திருநாள் உலகெங்கும் இருக்கும் தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் புனிதமான தமிழ் மாதமான 'தை'யை முன்னிட்டு,காலையிலேயே பெண்கள் தங்களது வீடுகளில் முன்பு வண்ண கோலங்கள் போட்டு பொங்கல் பண்டிகையை வரவேற்றனர். மக்கள் காலையிலேயே நீராடிவிட்டு புதிய புத்தாடை அணிந்து செழிப்பைக் குறிக்கும் வகையில் இயற்கையின் படைப்பில் கிடைக்கப்பெற்ற அரிசி காய்கறிகள் மற்றும் வெல்லத்தால் படையல் இட்டு புது பானையில் புத்தரிசியிட்டு இனிப்பு பொங்கல் வைத்தனர். பொங்கல் பொங்கும்போது பொங்கலோ பொங்கல் என உற்சாக குரல் எழுப்பி மிகுந்த மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடி வருகின்றனர்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சமத்துவத்தை உணர்த்தும் விதமாக பொது இடங்களில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.

மாநிலம் முழுவதும் புதுமண தம்பதியினர் தங்களது தலைப் பொங்கல் கொண்டாடினர். சீர்வரிசையாக கொண்டுவரப்பட்ட பொருட்களைக் கொண்டு பொங்கலிட்டு வழிபாடுகளை மேற்கொண்டனர். இருவரும் இணைந்து பொங்கல் பண்டிகை கொண்டாடுவது உற்சாகமான ஒன்றாகவும் புது அனுபவத்தை தருவதாக  புதுமண தம்பதிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

பொங்கல் பண்டிகை முன்னிட்டு பல்வேறு கொண்டாட்டங்களுக்கும் ஏற்பாடுகள் செய்து மக்கள் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இதேபோன்று அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில், பல்வேறு கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகளும் நடைபெற்று வருகின்றன.

மதுரையில் பிரசித்தி பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - காளைகளை அடக்கும் திருவிழா, திருவிழாவையொட்டி தொடங்கியது. ஆர்வமுடன் இருந்த ஏராளமான வீரர்கள் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்றனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி, கோயில்களில் மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். கோயில்களில் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளரும், மாநில எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

திமுக இளைஞரணி தலைவரும், மாநில அமைச்சருமான உத்யநிதி ஸ்டாலினும் பொங்கல் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

"பிற்போக்கு ஆரிய நடைமுறைகள் அழிந்து திராவிட சமத்துவம் மலரட்டும்.

உங்கள் அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்" என்று  தெரிவித்துள்ளார்.

2006-11 ஆட்சியின் போது மறைந்த மு.கருணாநிதி தலைமையிலான திமுக அரசு, ஏப்ரலில் கொண்டாடப்பட்ட தமிழ்ப் புத்தாண்டை ஜனவரி மாதத்துடன் தை மாதத்தை தமிழ் நாள்காட்டியை மாற்றியது.

இருப்பினும், மறைந்த ஜெ ஜெயலலிதாவின் கீழ் வந்த அதிமுக அரசு அதை ஏப்ரல் அல்லது தமிழ் மாதமான சித்திரை என்று மாற்றியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com