டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

இந்து மக்களின் உரிமையைப் பறிக்க முயற்சி நடந்தால் சட்டப்பூர்வமாக போராடுவோம்: நிர்மலா சீதாராமன்

இந்து மக்களின் உரிமையைப் பறிக்க முயற்சி நடந்தால் சட்டப்பூர்வமாக போராடுவோம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.  

News image
(கோப்புப்படம்)
Updated On :7 பிப்ரவரி 2024, 3:16 pm

DIN

இந்து மக்களின் உரிமையைப் பறிக்க முயற்சி நடந்தால் சட்டப்பூர்வமாக போராடுவோம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோயில் நிகழ்ச்சி காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் எல்இடி திரையின் மூலம் இன்று சிறப்பு நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். தனியார் கோயில்களில் ஒளிபரப்ப தடையில்லை என நீதிமன்றம் கூறியதையடுத்து நேரலை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் தெரிவித்த பிறகே எல்இடியில் பார்க்க முடிந்தது. செய்யும் முறையை மாற்றிக் கொள்ளாமல் மக்களை கஷ்டப்படுத்தி இருக்கிறது திமுக அரசு.

எல்இடி தொழில் செய்யும் வியாபாரிகள் அனைவரும் அரசின் அடக்குமுறையால் கஷ்டப்பட்டார்கள். காவல்துறையை கையில் வைத்துக்கொண்டு ஆதிக்கத்தை காட்ட முயற்சி செய்தது அறநிலையத்துறை. இந்து மக்களின் உரிமையைப் பறிக்க முயன்றால் சாலையில் இறங்கி கத்தும் செயல்களில் ஈடுபட மாட்டோம். 

இந்து மக்களின் உரிமையைப் பறிக்க முயற்சி நடந்தால் சட்டப்பூர்வமாக போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.