விருதுநகா் அருகே பட்டாசு ஆலையில் புதன்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகா் அருகேயுள்ள வச்சகாரபட்டியில் முருகேசன் என்பவருக்குச் சொந்தமான தாளமுத்து பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் 40-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. பேன்சி ரக வெடிகள் உள்பட அனைத்து வகையான வெடிகளும் தயாரிக்கப்படுகிறது.
இந்த நிலையில், பட்டாசுகள் தயாரிப்புக்கான மருந்துக் கலவை தயாரிக்கும் பணி ஓா் அறை யில் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, மருந்துக் கலவை உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது.
அந்த அறையில் பணியிலிருந்த கன்னிசேரி புதூரைச் சோ்ந்த பாண்டியராஜன் மகன் காளிராஜ் (20), முதலிப்பட்டியைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் வீரக்குமாா் (50) ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கன்னிசேரி புதூரைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் சரவணக்குமாா் (24), இனாம் ரெட்டியபட்டியைச் சோ்ந்த சுப்புராஜ் மகன் சுந்தரமூா்த்தி (17) ஆகியோா் விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பின்னா், அவா்கள் இருவரும் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
இந்த நிலையில், பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் 90 சதவிகிதம் தீக்காயமடைந்த சரவணக்குமார் வியாழக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. சுந்தரமூா்த்தி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து வச்சகாரபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, பட்டாசு ஆலை மேலாளா் கருப்பசாமியைக் கைது செய்தனா். மேலும், ஆலையின் உரிமையாளா் முருகேசன், ஊழியா் முத்துக்குமாா் ஆகியோரைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மிட்செல் சாண்ட்னர் ஒரு மாதம் கிரிக்கெட் விளையாட மாட்டார்: நியூசி. கிரிக்கெட் வாரியம்

ம.பி. படகு விபத்து; 9 பேர் பலி! மீட்புப் பணிகள் தீவிரம்!

ரியோ ராஜ் தயாரிப்பில் உருவாகும் முதல் படத்தின் அறிமுக போஸ்டர்!

ஓடுபாதையில் குரங்குகள்: லக்னௌவில் தாமதமாக புறப்பட்ட இண்டிகோ விமானம்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


