விவாகரத்து வழக்கு: ஜி.வி.பிரகாஷ், சைந்தவி நேரில் ஆஜராக உத்தரவு!
விவகாரத்து வழக்கில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், சைந்தவி ஆகியோர் நேரில் ஆஜராக சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜி.வி.பிரகாஷ், சைந்தவி.
கோப்புப்படம்.

ஜி.வி.பிரகாஷ், சைந்தவி.
கோப்புப்படம்.
பரஸ்பரம் விவாகரத்து கோரிய வழக்கில் இசையமைப்பாளா் ஜி.வி.பிரகாஷ் - பாடகி சைந்தவி இருவரும் செப். 25-ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் கடந்த 2013-ஆம் ஆண்டு தனது பள்ளித் தோழியும், பின்னணிப் பாடகியுமான சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டாா். ஜி.வி.பிரகாஷ் - சைந்தவிக்கு தம்பதிக்கு ஒரு மகள் உள்ளாா். கடந்த 12 ஆண்டு திருமண உறவில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, இருவருக்கிடையே இருந்த பிரச்னை காரணமாக அண்மைக் காலமாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனா்.
பின்னா், இருவரும் பிரிவதாக அறிவித்து சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பரம் விவாகரத்து கோரி, கடந்த ஆண்டு ஏப். 24-ஆம் தேதி நேரில் ஆஜராகி மனு தாக்கல் செய்திருந்தனா். மீண்டும் இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்த சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி, இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரிய மனுவை செப். 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். அன்றைய தினம் விசாரணைக்கு இருவரும் நேரில் ஆஜராகவும் நீதிபதி உத்தரவிட்டாா். இருவரும் அன்றைய நேரில் ஆஜராகி தங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் பட்சத்தில் அன்றைய தினம் இந்த விவாகரத்து வழக்கில் உத்தரவு பிறப்பிக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...