நாளை வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்!இன்று வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு!சம்பா நெற்பயிா்க் காப்பீட்டு காலவரம்பு டிச. 1 வரை நீட்டிப்புஉபோ் செயலியில் இன்று ஆட்டோ, கால் டாக்ஸிகள் இயக்கப்படாது!

தமிழ்நாட்டுக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்குமா-? ப.சிதம்பரம் கேள்வி

நாடாளுமன்ற நிலைக்குழு அறிவுறுத்தியபடி தமிழ்நாட்டுக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்குமா? என முன்னாள் மத்திய நிதியமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ப.சிதம்பரம் - கோப்புப்படம்.

Updated On :

நாடாளுமன்ற நிலைக்குழு அறிவுறுத்தியபடி தமிழ்நாட்டுக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்குமா? என முன்னாள் மத்திய நிதியமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு முறையே ரூ 328 கோடி, ரூ 2151 கோடி, ரூ 1745 கோடி மத்திய அரசு மறுத்திருக்கிறது.

இந்தத் தொகைகளை உடனடியாகக் கொடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றக் கல்வித் துறை நிலைக்குழு அறிவுறுத்தியிருக்கிறது.

தேசிய கல்விக் கொள்கையுடன் இந்தத் தொகைகளை அளிப்பதைப் பிணைக்கக் கூடாது என்றும் நிலைக்குழுஅறிவுறுத்தியிருக்கிறது.

இந்த அறிவுரையை ஏற்று பணங்களை மத்திய அரசு அளிக்கப்போகிறதா அல்லது நிலைக்குழுவின் அறிவுரையைப் புறக்கணிக்கப் போகிறதா என்று பார்க்கலாம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2,401 கோடி நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் அண்மையில் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் (எஸ்எஸ்ஏ) 2018-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்துக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் என்ற பகிா்வு முறையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதன்படி, 2024-2025-ஆம் நிதியாண்டில் மத்திய அரசு தனது பங்கான ரூ.2,152 கோடியை தமிழகத்துக்கு வழங்கவில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.