8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

அம்பத்தூர்: தனியார் ஷோரூமில் தீ விபத்து!

சென்னை அம்பத்தூர் தனியார் ஷோரூமில் தீ விபத்து

தனியார் ஷோரூமில் தீ விபத்து

Published On :5 ஏப்ரல் 2025, 11:32 am IST

அம்பத்தூர் சிடிஹெச் சாலையில் உள்ள தனியார் ஷோரூமில் தீப்பற்றி எரிகிறது. இந்த தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

அம்பத்தூர் சிடிஹெச் சாலையில் 4 தளங்கள் கொண்ட தனியார் ஷோரூம் இயங்கி வருகிறது. இங்கு வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் சனிக்கிழமை காலை 11 மணி அளவில் 4 ஆவது தளத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

தீவிபத்தால் ஏற்பட்ட கரும்புகை

தீவிபத்தால் ஏற்பட்ட கரும்புகை

இதில் வானுயரத்திற்கு கரும்புகை வெளியேறியது. தகவல் அறிந்து அம்பத்தூர், ஆவடி, வில்லிவாக்கம், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் அருகில் உள்ள உணவகத்தின் மாடியிலிருந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீ விபத்தால் சிடிஹச் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்தி வேடிக்கை பார்த்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்து போக்குவரத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அம்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.