
வங்கக்கடலில் எதிர்பார்க்கப்பட்ட நேரத்தை விட முன்னதாகவே குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில்,
தெற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வங்கக்கடலில் இன்று அல்லது நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதி(புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
ஆனால், தெற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியானது எதிர்பார்த்ததை விட 36 மணி நேரத்திற்கு முன்னதாகவே உருவாகியுள்ளது.
காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக இன்று(ஏப்.8) முதல் ஏப்.12 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை தொடரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை
ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏப்.7ல் அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.