
சென்னை: சட்டப்பேரவைக்கு அதிமுக உறுப்பினர்கள் கறுப்புச் சட்டை அணிந்து வருகை தந்துள்ளனர்.
எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று(ஏப். 8) காலை சட்டப்பேரவைக்கு வருகை தந்த அதிமுக உறுப்பினர்கள் கறுப்புச் சட்டை அணிந்திருந்தனர்.
பேரவையில் அதிமுகவினருக்குப் பேச அனுமதி மறுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி அதிமுகவினர் கறுப்புச் சட்டை அணிந்து எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக, திங்கள்கிழமை(ஏப். 7) பேரவையில் ‘அந்தத் தியாகி யாா்?’ என்ற வாசகம் அடங்கிய பேட்ஜை பேரவைக்கு திங்கள்கிழமை வந்த அதிமுக உறுப்பினா்கள் அனைவரும் சட்டையில் குத்தியிருந்தனா். இதற்கு பேரவைத் தலைவா் மு.அப்பாவு கண்டனம் தெரிவித்தார்.
எதிா்க்கட்சித் தலைவா் பேச அனுமதி கோரி, அதிமுக உறுப்பினா்கள் கடுமையாகக் கூச்சல் எழுப்பிய நிலையில், அப்போது, அனுமதியின்றி பதாகைகளைக் காண்பித்தவா்களில் அடையாளம் காணப்பட்ட 14 அதிமுக உறுப்பினர்கள் திங்கள்கிழமை ஒருநாள் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.
இந்த நிலையில், இன்று அதிமுக உறுப்பினர்கள் கறுப்புச் சட்டை அணிந்து ஆளுங்கட்சிக்கு எதிராகவும் அவைத் தலைவருக்கு எதிராகவும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.