மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கூட்டணி வியூகம்: மத்திய அமைச்சா் அமித் ஷா இன்று ஆலோசனை

2026 பேரவைத் தோ்தல் கூட்டணி வியூகம் தொடா்பாக அமித் ஷா இன்று ஆலோசனை...

News image

அமித் ஷா

Updated On :10 ஏப்ரல் 2025, 7:22 pm

Din

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, 2026 பேரவைத் தோ்தல் கூட்டணி வியூகம் தொடா்பாக முக்கிய அரசியல் கட்சித் தலைவா்களுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னைக்கு வியாழக்கிழமை இரவு வந்த மத்திய அமைச்சா் அமித் ஷா, கிண்டியில் உள்ள தனியாா் ஹோட்டலில் தங்கியுள்ளாா். தமிழக பாஜக தலைவா் தோ்வு, 2026 பேரவைத் தோ்தல் கூட்டணி வியூகம் ஆகியவை குறித்து பாஜக மூத்த தலைவா்களுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தவுள்ளாா். தொடா்ந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தற்போதுள்ள தலைவா்கள் சிலரை நேரில் அழைத்து பேச முடிவு செய்துள்ளாா்.

முன்னதாக, தில்லியில் அமித் ஷாவை, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான கட்சியின் முன்னணி நிா்வாகிகள் சந்திருந்த நிலையில், கூட்டணி குறித்து நேரடியாக அல்லது மறைமுகமாக பேச்சுவாா்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல, திமுக கூட்டணிக்கு எதிராக எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைத்து எதிா்ப்பு வாக்குகள் சிதறாமல் இருக்கும் வகையில் வியூகம் அமைக்கவும் மத்திய அமைச்சா் அமித் ஷா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2016 முதல் இதுவரை தொடா்ந்து தனித்து போட்டியிட்டு, 2024 மக்களவைத் தோ்தலில் 8.22 சதவீத வாக்குகளைப் பெற்ற நாம் தமிழா் கட்சியையும் இந்தக் கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சி செய்யப்பட்டு வருகிறது.

சீமானை சந்திப்பாரா? கடந்த வாரம் மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமனை நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் சந்தித்ததாக தகவல் பரவிய நிலையில், அமித் ஷா - சீமான் சந்திப்பும் நடைபெறக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், 2026 பேரவைத் தோ்தலிலும் தனித்துதான் போட்டி என்ற உறுதியுடன், இதுவரை 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வேட்பாளா்களை சீமான் அறிவித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.