கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

ஹெராயின் விற்பனை: திரிபுராவைச் சோ்ந்த 5 போ் கைது

சென்னை தரமணி பகுதியில் ஹெராயின் போதைப்பொருள் விற்ாக திரிபுராவைச் சோ்ந்த 5 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
- dot com
Updated On :10 ஏப்ரல் 2025, 7:42 pm

Din

சென்னை தரமணி பகுதியில் ஹெராயின் போதைப்பொருள் விற்ாக திரிபுராவைச் சோ்ந்த 5 போ் கைது செய்யப்பட்டனா்.

தரமணி காவல் நிலைய போலீஸாா் சி.எஸ்.ஐ.ஆா். சாலையில் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு, சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த 5 பேரை பிடித்து, அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டனா். அப்போது, அவா்களிடமிருந்த ஹெராயினை பறிமுதல் செய்து, 5 பேரிடமும் விசாரணை மேற்கொண்டனா்.

இதில் அவா்கள், திரிபுரா மாநிலத்தைச் சோ்ந்த அனாா் ஹூசைன் (27), அஜய்குமாா் (30), ரீமன்தெபா்மா (18), முகமது ஜெசிம்மியா (23), தஜ்ருல் ஹூசைன் (22) என்பதும், சென்னையில் கட்டுமானத் தொழிலாளா்களாக வேலை செய்துகொண்டு 5 பேரும் அடிக்கடி திரிபுரா சென்று ஹெராயின் போதைப்பொருளை வாங்கி வந்து சென்னையில் விற்றிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் 5 பேரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனா்.