மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

நாமக்கல் எம்.பி. வீட்டில் தீ விபத்து: காவல் துறை விளக்கம்!

தீ விபத்து தொடர்பாக காவல் துறை விளக்கம்.

Published On :

நாமக்கல் எம்.பி. வீட்டில் தீ விபத்து தொடர்பாக, மாவட்ட காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.

நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் வீடு சேந்தமங்கலம் அருகே பொட்டணம் கிராமத்தில் உள்ளது. இந்த வீட்டில் அவருடைய தாயார் வருதம்மாள்(75) வசித்து வருகிறார். இங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதற்குக் காரணம் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதே என்று செய்தி வெளியானது.

இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது:

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பொட்டணம் கிராமத்தில் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரனுக்கு சொந்தமான வீட்டில் அவரது தாயார் வசித்து வருகின்றார்.

இன்று (ஏப். 10) அதிகாலை 01.30 மணியளவில் வீட்டில் உள்ள ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடம் சென்று தீயை அணைத்தனர்.

இவ்விபத்தில் வீட்டிலிருந்த மின்விசிறி, சுவிட்ச் பாக்ஸ் மற்றும் ஏசி ஆகியவை சேதமடைந்துள்ளது. இவ்விபத்தில் எந்தவொரு நபருக்கும் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. இவ்விபத்து தொடர்பாக தனியார் தொலைக்காட்சியில் நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக செய்தி ஒளிபரப்பப்பட்டது.

மேற்கண்ட செய்தியானது பொய்யான புரளியாகும் என நாமக்கல் மாவட்ட காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.