பாஜக - அதிமுக கூட்டணி அறிவிப்பு? செய்தியாளர்களை சந்திக்கிறார் அமித் ஷா!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சென்னை வருகை பற்றி...
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னைக்கு வருகைதந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று நண்பகல் 12 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளார்.

சென்னைக்கு வியாழக்கிழமை இரவு வந்த மத்திய அமைச்சா் அமித் ஷா, கிண்டியில் உள்ள தனியாா் ஹோட்டலில் தங்கியுள்ளாா். தமிழக பாஜக தலைவா் தோ்வு, 2026 பேரவைத் தோ்தல் கூட்டணி வியூகம் ஆகியவை குறித்து பாஜக மூத்த தலைவா்களுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தவுள்ளாா்.

தொடா்ந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தற்போதுள்ள தலைவா்கள் சிலரை நேரில் அழைத்து பேச முடிவு செய்துள்ளாா். ஜி.கே. வாசனுடனான சந்திப்பு உறுதியாகியுள்ளது. மேலும், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்திக்க இதுவரை நேரம் கொடுக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, தில்லியில் அமித் ஷாவை, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான கட்சியின் முன்னணி நிா்வாகிகள் சந்தித்திருந்தனர். அடுத்தடுத்து பாஜகவின் முக்கியத் தலைவர்களை அதிமுக நிர்வாகிகள் சந்தித்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை தனியார் ஹோட்டலில் இன்னும் சற்றுநேரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் அமித் ஷா, நண்பகல் 12 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கவிருக்கிறார்.

இந்த சந்திப்பின்போது, தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

2016 முதல் இதுவரை தொடா்ந்து தனித்து போட்டியிட்டு, 2024 மக்களவைத் தோ்தலில் 8.22 சதவீத வாக்குகளைப் பெற்ற நாம் தமிழா் கட்சியையும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சி செய்யப்பட்டு வருகிறது.

டந்த வாரம் மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமனை நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் சந்தித்ததாக தகவல் பரவிய நிலையில், அமித் ஷா - சீமான் சந்திப்பும் நடைபெறக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், 2026 பேரவைத் தோ்தலிலும் தனித்துதான் போட்டி என்ற உறுதியுடன், இதுவரை 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வேட்பாளா்களை சீமான் அறிவித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com