
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திடீர் நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு அனுமதிக்கப்பட்ட டிடிவி தினகரனுக்கு இன்று ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மறுபுறம் வழக்கமான பரிசோதனைக்காகதான மருத்துவமனையில் டிடிவி தினகரன் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அமமுக தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
சென்னைக்கு இருநாள்கள் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அமமுகவின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் அமித் ஷாவை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.