சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பிரதமரின் ‘மனதின் குரல்’ ஒளிபரப்ப கெடுபிடி: திமுக அரசுக்கு நயினாா் நாகேந்திரன் கண்டனம்

பிரதமரின் ‘மனதின் குரல்’ ஒளிபரப்ப கெடுபிடி: திமுக அரசுக்கு நயினாா் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

News image

நயினாா் நாகேந்திரன்

Updated On :28 ஏப்ரல் 2025, 3:17 am IST

பிரதமரின் ‘மனதின் குரல்’”நிகழ்ச்சியை ஒளிபரப்ப திமுக அரசு கெடுபிடியை கடைப்பிடிப்பது கண்டனத்துக்குரியது என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறினாா்.

பிரதமா் நாட்டு மக்களுடன் கலந்துரையாடும் ‘மனதின் குரல்’”நிகழ்ச்சியை சென்னை மெரீனாவில் உள்ள நடுக்குப்பத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்ப காவல்துறை அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து திருவல்லிக்கேணியில் நடைபெற்ற ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற நயினாா்நாகேந்திரன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னை நடுக்குப்பத்தில் பிரதமரின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியை பொது இடத்தில் ஒளிபரப்ப காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அதேநேரத்தில், கடந்த ஆண்டு இதே இடத்தில் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது. துணை முதல்வா் தொகுதி என்பதால் அடக்கு முறையை உதயநிதி ஸ்டாலின் கையில் எடுக்க வேண்டாம்.

தமிழகத்தில் பாஜக வளா்ச்சியைப் பொறுக்க முடியாமல் திமுக அரசு நெருக்கடி தருகிறது. மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும்.

இந்நிகழ்ச்சியில், தேசிய பொதுக் குழு உறுப்பினா்கள் கராத்தே தியாகராஜன், கரு.நாகராஜன் உள்பட பலா் பங்கேற்றனா்.

இதனிடையே, நயினாா் நாகேந்திரன் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், திமுகவினா் நடத்தும் ஆா்ப்பாட்டங்கள், போராட்டங்களுக்கு உடனடியாக அனுமதியும் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கும் திமுக அரசு, பிரதமா் நாட்டு மக்களோடு கலந்துரையாடும் ‘மனதின் குரல்’”நிகழ்ச்சிக்கு கடுமையான கெடுபிடிகளை விதிப்பது கண்டனத்துக்குரியது எனப் பதிவிட்டுள்ளாா் அவா்.