நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பூந்தமல்லி - போரூா் இடையே ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

பூந்தமல்லி - போரூா் இடையே ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

News image

சென்னை போரூா் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஓட்டுநா் இல்லாத மெட்ரோ ரயில் இயக்குவதற்காக அமைக்கப்பட்ட இரும்பு பாலம்.

Updated On :28 ஏப்ரல் 2025, 12:20 pm

DIN

சென்னை: பூந்தமல்லி - போரூா் இடையே ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் இரண்டாம் நாளாக இன்றும் நடத்தப்படுகிறது.

சென்னையில் ஏற்கனவே முதல்கட்ட மெட்ரோ வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது.

இதில் முக்கிய வழித்தடமான கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப் பாதையாகவும், கோடம்பாக்கம் பவா் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பாலப் பாதையாகவும் அமைக்கப்பட்டு வருகிறது.

இதில், பூந்தமல்லி - போரூா் இடையே பல இடங்களில் ரயில் பாதை அமைக்கும் பணி, பொறியியல் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும் பூந்தமல்லி - போரூா் இடையே வரும் டிசம்பரில் ரயில் சேவை தொடங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த வழித்தடத்தில் கடந்த மாதம் 20-ஆம் தேதி முதற்கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்ட நிலையில், இரண்டாம் கட்ட சோதனை ஓட்டம் நேற்று தொடங்கியது.

இந்த வழித்தடத்தில் ஒரு பகுதியாக பூந்தமல்லி - முல்லைத்தோட்டம் இடையே 3 கி.மீ. தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலப் பாதையில் ஓட்டுநா் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நேற்று நடத்தப்பட்டது. இந்த சோதனை ஓட்டம் வெற்றியடைந்ததைத் தொடா்ந்து, பூந்தமல்லி - போரூா் வழித்தடத்தில் ஓட்டுநா் இல்லாத மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட சோதனை ஓட்டம் இன்றும் நடைபெறுகிறது.

இதைத் தொடா்ந்து பூந்தமல்லி - போரூா் மெட்ரோ ரயில் சேவை மக்கள் பயன்பாட்டுக்கு டிசம்பா் மாத இறுதிக்குள் கொண்டுவர வாய்ப்புள்ளதாகவும் மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.