மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை

கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மாணவி திவ்யா தற்கொலை

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :5 ஆகஸ்ட் 2025, 6:21 am

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவம் இரண்டாம் ஆண்டு பயின்று வந்த மாணவி திவ்யா தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார்.

டி.பி. சத்திரம் பகுதியில் தங்கியிருந்து, கல்லூரிக்கு வந்து சென்றுகொண்டிருந்த மாணவி திவ்யா, அவரது அறையில் தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறையினர் விரைந்து வந்து, உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். உடல் கூராய்வுக்காக, திவ்யா உடல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.