விஜய்யின் நாளைய புதுச்சேரி பயணம் ரத்து!

விஜய்யின் புதுச்சேரி பயணம் ரத்து செய்யப்பட்டது பற்றி...
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கோப்புப் படம்
Updated on
1 min read

தவெக தலைவா் விஜய்யின் சாலைவலத்துக்கு புதுச்சேரி அரசு அனுமதி கொடுக்காததால், அவரது பொதுக்கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தவெக தலைவா் விஜய் நாளை (டிச. 5) புதுச்சேரியில் சாலைவலம் நடத்துவதற்கு கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பே அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை கருத்தில் கொண்டு புதுச்சேரி காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமியை இந்த வாரத்தில் மட்டும் இரண்டு முறை நேரில் சந்தித்து சாலைவலத்துக்கு அனுமதி அளிக்க தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் கோரிக்கை வைத்தார்.

முதல்வருடனான சந்திப்பின் போது, போக்குவரத்து நெரிசல் இல்லாத, சாலை அகலகமாக உள்ள சிவாஜி சிலை முதல் கொக்கு பாா்க் வரை 1.5. கி.மீ. தொலைவுக்கு மட்டும் சாலைவலம் நடத்துவதற்கு ஆனந்த் அனுமதி கோரியதாக கூறப்படுகிறது.

இதற்கும் புதுச்சேரி காவல்துறையினர் அனுமதி அளிக்க மறுத்த நிலையில், பொதுக்கூட்டம் வேண்டுமென்றால் நடத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், பொதுக்கூட்டம் நடத்துவதற்கு இரண்டு இடங்களை ஆனந்த் தேர்வு செய்து கொடுத்ததாக கூறப்படும் நிலையில், தனது முழுப் பயணத்தையும் விஜய் ரத்து செய்துள்ளார்.

விஜய்யின் பொதுக்கூட்டமும் ரத்து செய்யப்பட்டதால் புதுச்சேரி தவெக தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Summary

Vijay's tomorrow Puducherry campaign cancelled

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com