பாபநாசம் அருகே நள்ளிரவில் விபத்து! காப்பாற்ற ஆள் இல்லாததால் பலியான இளைஞர்கள்!

பாபநாசம் அருகே நள்ளிரவில் விபத்து நேரிட்டதில், காப்பாற்ற ஆள் இல்லாததால் இளைஞர்கள் பலியான சோகம்.
சாலை விபத்து - கோப்புப்படம்
சாலை விபத்து - கோப்புப்படம்
Updated on
1 min read

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா அருகே, நேற்று நள்ளிரவு ஏற்பட்ட சாலை விபத்தில் காயமடைந்த இரண்டு இளைஞர்களை, காப்பாற்ற யாரும் இல்லாததால் உயிரிழந்த சோகம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்த திரிஷேக் (17), அவரது நண்பர் உதாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் (17) இருவரும், இருசக்கர வாகனத்தில் திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்து ஊருக்கு திரும்பி வந்துள்ளனர்.

நள்ளிரவு தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதாகோவில் பகுதியில் அதிவேகமாக வந்து கொண்டிருந்த போது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த வீட்டின் காம்பவுண்டு சுவரில் மோதி உள்ளது. மோதிய வேகத்தில் இரண்டு இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்துள்ளனர்.

இதில் இரண்டு இளைஞர்களுக்கும் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடி உள்ளனர். நள்ளிரவு நேரம் என்பதால் விபத்து ஏற்பட்டது யாருக்கும் தெரியவில்லை. இதனால் பலத்த காயத்துடன்‌ இருந்த இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இரண்டு இளைஞர்களும் விபத்தில் உயிரிழந்து கிடப்பதை பார்த்து திருக்காட்டுப்பள்ளி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து இரண்டு பேரின் உடல்களை மீட்டு திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Summary

It is a tragedy that the youths lost their lives in an accident near Papanasam.

in the middle of the night because there was no one to save them.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com