

மகாராஷ்டிரத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் அஜீத் பவாருடன் சேர்த்து பலியானவர்கள் விவரம் வெளியானது.
மும்பையிலிருந்து மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவாருடன் சேர்த்து மொத்தம் 5 பேருடன் புதன்கிழமை(ஜன. 28) காலை 8.10 மணிக்கு பாராமதிக்குப் புறப்பட்ட லியர்ஜெட் 46 விமானம் 8.45 மணியளவில் ரேடார் கண்காணிப்பிலிருந்து விலகியது. பாராமதியில் காலை 8.50 மணிக்கு தரையிறங்கும்போது விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் அந்த விமானத்திலிருந்தவர்கள் அனைவரும் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஜீத் பவாருடன் விமானிகள் இருவர் - கேப்டன் சுமீத் கபூர், கேப்டன் ஷாம்பவி பதக், விமானப் பணிப்பெண் பிங்கி மாலி மற்றும் அஜீத் பவாரின் பாதுகாவலர் விதீப் ஜாதவ் ஆகியோர் அந்த விமானத்தில் சென்றனர்.
விமானப் பணிப்பெண் பிங்கி மாலி (29) குடியரசுத் தலைவர், பல மாநில முதல்வர்கள், பல அரசியல் தலைவர்கள் ஆகிய விஐபிக்களுடன் பயணித்த அனுபவமிக்கவராவார். அவர் அஜீத் பவாருடன் ஏற்கெனவே 3 முறை பயணித்திருந்த நிலையில், நான்காவது முறை சென்றபோது விபத்தில் அவருடன் சேர்ந்து பலியானார்.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை(ஜன. 27) மாலை தமது தந்தையிடம் தொலைபேசி வழியாகப் பேசியிருந்த பிங்கி, “மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவாருடன் நாளை(ஜன. 28) பயணிக்கவிருக்கிறேன். அவர் தரையிறங்கியதும், நாண்டேட் செல்லும் நான், ஹோட்டலுக்குச் சென்ற பின் உங்களைத் திரும்ப அழைத்து பேசுகிறேன்” என்றிருக்கிறார்.
இந்த நிலையில், இன்று தொலைபேசியில் விமான விபத்து பற்றிய தகவலைப் பார்த்து, உடைந்து போயிருப்பதாக அவரது தந்தை சொல்லொணாத் துயரத்துடன் நடந்தவற்றை விவரித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.