

எதிர்வரும் பேரவைத் தேர்தலில் போட்டியிட அதிமுகவில், விருப்ப மனு வழங்கும் நிகழ்வை அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று(டிச. 15) தொடக்கி வைத்தார்.
இன்று மட்டும் பகல் 12 முதல் மாலை 5 மணி வரையும், பிற நாள்களில் காலை 10 முதல் மாலை 5 மணி வரையும் படிவங்களை பெற்று பூா்த்தி செய்து விருப்ப மனு அளிக்கலாம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் விருப்ப மனு பெறலாம். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான விருப்ப மனுவை பெற ரூ.15,000, புதுச்சேரிக்கு ரூ.5,000 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு அல்லது அறிவிப்பு வெளியாவதற்கு ஒரு வார காலத்துக்கு பின்பு தான் விருப்ப மனுக்களை முக்கிய அரசியல் கட்சிகள் பெறுவது வழக்கம்.
ஆனால், இந்த முறை, அதிமுக, காங்கிரஸ், பாமக, அமமுக போன்ற கட்சிகள் முன்கூட்டியே விருப்ப மனுக்களை பெறும் அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில், அதிமுகவில் விருப்ப மனு வழங்கும் நிகழ்வை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று(டிச. 15) தொடக்கி வைத்தார்.
இதையும் படிக்க: சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்! - ஜெ.பி. நட்டா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.