

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் கருத்து தெரிவிக்காதது ஏன்? என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களுடன் அண்ணாமலை பேசியதாவது,
அரசியலில் நுழைந்துவிட்டு அமைதியாக இருக்க முடியாது. பேச வேண்டிய இடத்தில் விஜய் பேசியாக வேண்டும். கம்முனு இருங்க, கும்முனு இருங்க என்று பேச வேண்டிய இடத்தில் பேசாமல் இருக்காதீர்கள்.
நான் பேசவே மாட்டேன் வேடிக்கை மட்டுமே பார்ப்பேன் என்றால் உங்களை நம்பி மக்கள் எப்படி ஆட்சி பொறுப்பு தருவார்கள்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் கருத்து தெரிவிக்காதது ஏன்? புதுச்சேரி அமைச்சருக்கு அதிகாரமில்லை என்று பேசியவர், திருப்பரங்குன்றம் பற்றி பேசாதது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு குறித்து பேசிய அவர், தோல்வி குறித்து பாஜகவுக்கு மு.க. ஸ்டாலின் பாடம் எடுக்க வேண்டாம் எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | டிச.29-ல் பல்லடத்தில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.