ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

ஈரோட்டில் தவெகவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பணியாற்றிய காவல்துறையினருக்கு விஜய் நன்றி
தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்
Updated on
1 min read

ஈரோட்டில் தவெகவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பணியாற்றிய காவல்துறையினருக்கு விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசலுக்குப் பிறகு முதல்முறையாக தமிழகத்தில் விஜயமங்கலம் அருகே தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு நடிகர் விஜய் உரையாற்றினார்.

இந்த நிலையில், பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கும் காவல்துறையினருக்கும் கட்சித் தலைவர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.

விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், "எப்போதும், என் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நீங்கள் உடன் வருகிறீர்கள். நீங்கள் காட்டும் எல்லையில்லா அன்பினாலும் ஆதரவினாலும் பெரும் உத்வேகம் அடைந்து வருகிறேன். இந்த உத்வேகமே எனக்கு எப்போதும் மிகப் பெரிய உந்துசக்தியாக இருக்கிறது.

எத்தனை அரசியல் கட்சிகள், எத்தனை ஆண்டுகாலம் நம்மை ஆண்டாலும், வறுமையின் பிடியில் சிக்கியுள்ள என் அன்புக்கு உரியவர்களாகிய உங்களுக்கு ஒரு விடிவு காலம் கண்டிப்பாக வரவேண்டும். ஏக்கத்திலேயே, கனவுகளிலேயே காலங்கள் கடந்து போய்விடக் கூடாது.

எனவே தான், வளர்த்து ஆளாக்கிய உங்களோடு இணைந்து உங்களுக்காக உழைக்கவே நாம் நம் அரசியல் பயணத்தைத் தொடங்கினோம். அந்தப் பயணத்தில், உங்களைச் சந்திப்பதற்கு நாம் புறப்பட்டதில் இருந்தே எவ்வளவோ தடைகள் தொடர்ந்து நமக்கு வந்தவண்ணம் இருந்தன. அவற்றில் உங்களுக்குத் தெரிந்தவை பல, உங்களுக்குத் தெரியாதவை பல.

ஆனால், அவற்றையெல்லாம் உங்களின் பேராதரவு மற்றும் தூய அன்பின் துணையோடு முறியடித்து வெற்றி அடைந்து வருகிறோம். உங்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறோம்.

அந்த வகையில் இன்று மஞ்சள் மாநகரான ஈரோட்டில் நடைபெற்ற நமது சந்திப்பானது, வாழ்நாளில் இதுவரை இல்லாத வகையில் மிகுந்த மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்தச் சந்திப்பில், அளப்பரிய அன்பும் ஆதரவும் அளித்த, என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.

இந்த நெகிழ்ச்சிமிகு சந்திப்பை, மிகப் பிரம்மாண்டமாகவும் மிகுந்த பாதுகாப்புடனும் மெச்சத் தகுந்த வகையிலும் ஏற்பாடு செய்திருந்த அனைத்து நிர்வாகிகளுக்கும், தன்னார்வலர்களுக்கும் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவற்றைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த காவல் துறைக்கும் மனமார்ந்த நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: விஜய்யிடம் இதுபோல கேள்வி கேட்டிருக்கிறீர்களா? - உதயநிதி பேட்டி

Summary

Erode campaign! TVK Leader Vijay thanks the police!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com