தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது! - மாவட்டவாரியாக நீக்கப்பட்டவர்கள் விவரம்

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது பற்றி...
தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது! - மாவட்டவாரியாக நீக்கப்பட்டவர்கள் விவரம்
ENS
Updated on
3 min read

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்டவாரியாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு(எஸ்ஐஆர்) முன்பு 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில் தற்போது 5.43 கோடி வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர்.

எஸ்ஐஆர் நடவடிக்கைகளில் மொத்தம் 97,37,832 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

பிகாரைத் தொடர்ந்து தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகள் கடந்த நவம்பர் 4-ம் தேதி தொடங்கி நடைபெற்றன.

தமிழகத்தில் நவ. 4 ஆம் தேதி தொடங்கிய இந்த பணிகள் டிச. 4 ஆம் தேதி முடிவடைய இருந்த நிலையில் வாக்காளர்கள், படிவங்களை நிரப்பி வழங்குவதற்கு இரு முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

அதன்படி டிச. 14 ஆம் தேதி எஸ்ஐஆர் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று(டிச. 19, வெள்ளிக்கிழமை) தமிழ்நாட்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை

சென்னையில் 14,25,018 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். முன்பு 40,04,694 பேர் இருந்த நிலையில் தற்போது 25,79,676 பேர் உள்ளனர். மொத்தம் 35.58% சதவீதம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. இதுவரை வெளியான விவரங்களில் சென்னையில் அதிகமாக வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் மிகப்பெரிய தொகுதியான சோழிங்கநல்லூரில் 2,18,444 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 25.2% வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 7,01,871 வாக்காளர்கள்.

அதைத் தொடர்ந்து திருப்பூர், கோவை, காஞ்சிபுரத்தில் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

கோவை

கோவையில் எஸ்ஐஆர் நடவடிக்கையில் 6.5 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

கோவை மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 32,25,198. இதில் 6,50,590 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

இன்று வெளியிடப்பட்ட கோவை மாவட்டத்தின் வாக்காளர்களின் எண்ணிக்கை - 25 இலட்சத்து 74 ஆயிரத்து 608 பேர் ( 25,74,608 )

இறந்த வாக்காளர் எண்ணிக்கை - 1,19,489

முகவரியில் இல்லாதவர்கள் - 1,08,360

நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள் - 3,99,159

இரட்டைப் பதிவுகள் - 23,202

இதர காரணங்கள் - 380 பேர்.

தருமபுரி மாவட்டத்தில் 81,515 பேர் நீக்கம். (முன்பு 12,85,432 பேர் இருந்த நிலையில் தற்போது 12,03,917 பேர் உள்ளனர்)

கரூர் மாவட்டத்தில் 79,690 வாக்காளர்கள் நீக்கம். (முன்பு - 8,98,362, தற்போது - 8,18,672)

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் 3,31,787 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எஸ்ஐஆர் பணிகளுக்கு முன்பு வாக்காளர்கள் எண்ணிக்கை - 23,68,967, நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை - 3,31,787, தற்போதுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை - 20,37,180.

திண்டுக்கல் மாவட்டத்தில் 3,24,894 வாக்காளர்கள் நீக்கம். முன்பு 19,34,447 வாக்காளர்கள் இருந்த நிலையில் தற்போது 16,09,553 வாக்காளர்கள் உள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் 3,62,429 வாக்காளர்கள் நீக்கம். முன்பு 26,68,108 பேர் இருந்த நிலையில் தற்போது 23,05,679 பேர் உள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் 1,93,706 வாக்காளர்கள் நீக்கம். எஸ்ஐஆருக்கு முன்பு - 14,66,650, எஸ்ஐஆருக்குப் பின்பு 12,72,954.

விழுப்புரம் மாவட்டத்தில் 17,27,490 பேர் இருந்த நிலையில் 1,82,865 பேர் நீக்கம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,74,549 பேர் நீக்கம். (முன்பு - 16,80,626, தற்போது - 15,06,077 வாக்காளர்கள்)

ராணிப்பேட்டையில் 1,45,157 வாக்காளர்கள் நீக்கம். முன்பு 10,57,700 வாக்காளர்கள் இருந்த நிலையில் தற்போது 9,12,543 வாக்காளர்கள் உள்ளனர்.

நாகப்பட்டினத்தில் 57,338 வாக்காளர்கள் நீக்கம். எஸ்ஐஆருக்கு முன்பு - 5,67,730 வாக்காளர்கள். தற்போது 5,10,392 வாக்காளர்கள்.

செங்கல்பட்டில் 7,01,871 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முன்பு 27,87,362 வாக்காளர்கள் இருந்த நிலையில் தற்போது 20,85,491 பேர் உள்ளனர்.

திருப்பூரில் 5,63,785 வாக்காளர்கள் நீக்கம். முன்பு - 24,44,929. தற்போது - 18,81,144.

திருவண்ணாமலையில் 2,51,162 வாக்காளர்கள் நீக்கம். முன்பு 21,21,902 வாக்காளர்கள் இருந்த நிலையில் தற்போது 18,70,740 வாக்காளர்கள் உள்ளனர்.

கள்ளக்குறிச்சியில் 84,329 வாக்காளர்கள் நீக்கம். முன்பு - 11,60,607. தற்போது - 10,76,278.

மதுரையில் 3,80,474 வாக்காளர்கள் நீக்கம். முன்பு 27,40,631 வாக்காளர்கள் இருந்த நிலையில் தற்போது 23,60,157 பேர் உள்ளனர்.

காஞ்சிபுரத்தில் 2,74,274 வாக்காளர்கள் நீக்கம். எஸ்ஐஆருக்கு முன்பு - 14,01,198. தற்போது - 11,26,924.

அரியலூரில் 24,368 வாக்காளர்கள் நீக்கம். முன்பு - 5,30,890. தற்போது - 5,06,522.

கடலூரில் 2,46,818 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். முன்பு 21,93,577 வாக்காளர்கள், தற்போது 19,46,759 வாக்காளர்கள்.

புதுக்கோட்டையில் 1,39,587 வாக்காளர்கள் நீக்கம். முன்பு 13,94,112 வாக்காளர்கள் இருந்த நிலையில் தற்போது 12,54,525 பேர் உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் நீக்கப்பட்டவர்கள் - 3,25,429. முன்பு - 19,97,189, தற்போது - 16,71,760.

கன்னியாகுமரியில் 1,53,373 வாக்காளர்கள் நீக்கம். எஸ்ஐஆருக்கு முன்பு - 15,92,872. தற்போது - 14,39,499.

சிவகங்கையில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 1,50,828. எஸ்ஐஆருக்கு முன்பு 12,29,933 வாக்காளர்கள். தற்போது 10,79,105 வாக்காளர்கள்.

தூத்துக்குடியில் 1,62,527 பேர் நீக்கம். எஸ்ஐஆருக்கு முன்பு - 13,28,152. தற்போது - 11,65,631.

தென்காசியில் 1,51,902 வாக்காளர்கள் நீக்கம். தற்போது 12,25,297 வாக்காளர்கள் உள்ளனர்.

தேனி மாவட்டத்தில் 1,25,739 பேர் நீக்கம். முன்பு 11,30,303 வாக்காளர்கள். தற்போது 10,04,564 வாக்காளர்கள்

தஞ்சாவூரில் 2,06,503 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முன்பு 20,98,561 வாக்காளர்கள். தற்போது 18,92,058 வாக்காளர்கள்.

விருதுநகர் மாவட்டத்தில் 1,89,964 வாக்காளர்கள் நீக்கம். முன்பு 16,26,485 வாக்காளர்கள். தற்போது 14,36,521 வாக்காளர்கள்.

திருநெல்வேலியில் 2,14,957 பேர் நீக்கம். இறந்தவர்கள்: 83,309 பேர், இடம் பெயர்ந்தவர்கள்: 1,17,359 பேர், ஏற்கனவே பதிவில் உள்ளவர்கள்- 12,000 பேர், ஊரில் இல்லாதவர்கள்: 2,260 பேர், இதர காரணங்கள்: 29 பேர்.

விழுப்புரத்தில் 1,82,865 வாக்காளர்கள் நீக்கம். முன்பு - 17,27,490, தற்போது - 15,44,625.

திருவள்ளூரில் 6,19,777 வாக்காளர்கள் நீக்கம். முன்பு 35,82,226 வாக்காளர்கள். தற்போது 29,62,449 வாக்காளர்கள்.

ராமநாதபுரத்தில் 1,17,364 வாக்காளர்கள் நீக்கம். முன்பு 12,08,690 வாக்காளர்கள் இருந்த நிலையில் தற்போது 10,91,326 வாக்காளர்கள் உள்ளனர்.

திருப்பத்தூரில் 1,16,739 வாக்காளர்கள் நீக்கம். முன்பு - 9,99,411. தற்போது - 8,82,672.

மயிலாடுதுறையில் 75,378 வாக்காளர்கள் நீக்கம். முன்பு - 7,83,500. தற்போது - 7,08,122.

வேலூர் மாவட்டத்தில் 2,15,025 லட்சம் வாக்காளர்கள் நீக்கம். தற்போது 10,88,005 பேர் உள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 49,548 பேர் நீக்கம். எஸ்ஐஆருக்கு முன்பு - 5,90,490. தற்போது - 5,40,942.

நீலகிரியில் 56,091 வாக்காளர்கள் நீக்கம். எஸ்ஐஆருக்கு முன்பு - 5,89,167. தற்போது - 5,33,076.

திருவாரூரில் 1,29,480 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எஸ்ஐஆருக்கு முன்பு - 10,75,577. தற்போது - 9,46,097.

இணைப்பு
PDF
தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் விவரம்
பார்க்க
Summary

voter draft list released in Tamilnadu after SIR

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com