

தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடுவதாக வெளியான தகவலுக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.
கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், தி.மு.க மண்டல பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தலைமை வகித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நான் ஏற்கனவே பலமுறை சொல்லி உள்ளேன். தி.மு.க வை விமர்சனம் செய்யாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது என்ற ஒரு சூழல் இருகிறது.
தி.மு.க வை குறை சொல்லி ஆகவேண்டும் என்ற கட்டாயத்திற்காக தள்ளப்பட்டு உள்ளார்கள்.
இந்தியாவிற்கு வழிகாட்டக் கூடிய முதல்வராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார். அரசுக்கு ஆலோசனை சொல்லக் கூடிய கருத்துக்களாக இருந்தால், நிச்சயம் நாங்கள் ஏற்போம். கோவை தொகுதியில் போட்டியிடப் போவதாக சமூக ஊடகங்களில்தான் அதுபோன்ற தகவல் வெளியாகி உள்ளது.
சமூகவலைதளத்தில் யாரோ ? ஒருவர் பேசுவதை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. பத்து தொகுதியில் ஜெயிக்க வேண்டும் அதுவே எங்கள் முதல் முயற்சி.
வரும் 29 முதல்வர் ஸ்டாலின் மகளிர் மாநாட்டிற்கு கோவை வருகிறார். மகளிர் மாநாட்டில் ஐம்பதாயிரம் மகளிர் பயன்பட இருக்கிறார்கள். கோவை மாவட்டத்தில் வரை வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. தகுதியானவர்கள் எவரேனும் அதில் நீக்கப்பட்டு இருந்தால் அவர்கள் சேர்க்கப்படுவார்கள். அதற்கான பணிகளை முன்னெடுத்து உள்ளோம் .
இன்று தான் அரசியல் கட்சியினிடம் வரைவு வாக்காளர் பட்டியல் வழங்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியலைப் பார்த்த பிறகுதான் தெரிய வரும்.
குடியிருப்பு மாறியவர்கள், இடம் பெயர்ந்தவர்களின் பெயர்களை நீக்காமல் இருந்து இருக்கலாம். இந்த பட்டியலைப் பார்த்து பிறகு தான் விடுபட்டவர்களை சேர்ப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் .
பொதுவாக வாக்காளர் பட்டியல் என்பது நேர்மையான வாக்காளர் பட்டியலாக இருக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.