

தமிழக வெற்றிக் கழகத்தில் மாவட்டங்கள் கூடுதலாக பிரிக்கப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கி ஏற்கெனவே பிரிக்கப்பட்ட மாவட்டங்களுடன் கூடுதலாக 8 மாவட்டங்களுக்கு நிர்வாகிகளை நியமித்து விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாவட்டவாரியாக செயலாளர்கள், இணைச் செயலாளர்கள், பொருளாளர், துணைச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் பணிகளை மேற்கொள்ள, அமைப்பானது சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கி, 120 மாவட்டங்களாக ஏற்கெனவே பிரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நிர்வாக வசதிகளுக்காகக் கழக மாவட்டங்களின் எண்ணிக்கை கூடுதலாக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மாவட்டங்களோடு, மேலும் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, தற்போது 8 மாவட்டங்களுக்கு, கட்சி விதிகளின்படி மாவட்டக் கழக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க | பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.