

பாரதிய ஜனதா கூட்டணிக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வர வேண்டும் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களுடன் தமிழிசை செளந்தரராஜன் பேசியதாவது,
அமைச்சருடனான ஆலோசனையில் விஜய் உள்பட பல கட்சித் தலைவர்கள் குறித்துப் பேசினோம். ஆனால், கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. அரசியல் பொதுக்கருத்துகளையே பேசினோம். ஆலோசனையில் நடந்த கருத்து பரிமாற்றங்கள் குறித்து பேச கூற முடியாது.
எங்கள் கூட்டணியால் திமுக வெடவெடத்துப்போயுள்ளது. எல்லா நிகழ்ச்சியிலும் பாஜக குறித்தே முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசி வருகிறார். தனியாக நிற்பதை விட அனைவரும் இணைந்து நின்றால் வெற்றி என்பது சுலபமாக இருக்கும். இது விஜய்க்கும் பொருந்தும் எனக் குறிப்பிட்டார்.
சென்னையில் போட்டியிடுவீரா? தென் மாவட்டத்தில் போட்டியிடுவீரா? என்ற கேள்விக்கு ஆண்டவனும் ஆண்டுகொண்டிருப்பவரும் அதனை முடிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.