கடலூர் மாவட்டத்துக்கு வரும் ஜன. 3 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீநடராஜா் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி ஆருத்ரா தரிசனம் விழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.
இங்கு, மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் ஜனவரி 3-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது.
இதனால், கடலூர் மாவட்டத்துக்கு வரும் ஜன. 3 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையானது கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் எனவும் அனைத்து துணை கருவூலங்கள், மாவட்ட கருவூலம் ஆகியவை குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்டு வழக்கம்போல இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமை (பிப்ரவரி 14) பணி நாளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
A local holiday has been declared for Cuddalore district on January 3rd.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







