

திமுகவை வீழ்த்துவது மட்டுமே தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒற்றை இலக்கு என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களுடன் முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், "டிசம்பர் கடைசி வாரத்தில் இருக்கிறோம். இன்னும் 3 வாரங்கள் முழுமையாக உள்ளது. ஆகையால், தேசிய ஜனநாயக கூட்டணி எப்படி இருக்கும்? அதன் வலிமை எப்படி இருக்கும்? என்பதனைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
கடலூரில் ஜனவரி 9 ஆம் தேதியில் பொதுக் கூட்டம் நடத்தவிருப்பதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும், ஜனவரியில் எந்த முடிவையும் எடுப்பதாய் இல்லை என்று டிடிவி தினகரனும் கூறியிருக்கின்றனர். ஓபிஎஸ்ஸும் நேற்றுதான் கட்சிக் கூட்டம் நடத்தி, கருத்துகளைக் கேட்டிருக்கிறார். ஆகையால், எல்லாரும் நல்ல முடிவு எடுப்பர்.
தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையாக தேர்தல் களத்தில் நின்று, ஒரு பெரும் வெற்றியைப் பெறுவதற்கான எல்லா சாத்தியக் கூறுகளும் உள்ளன. திமுகவை வீழ்த்த வேண்டும் என்பது மட்டுமே தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒற்றை இலக்கு.
எல்லா தலைவர்களும், எல்லா கட்சிகளும் மரியாதையாக நடத்தப்பட்டு, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக் கட்டிலில் அமரும்" என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.