எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமிகோப்புப் படம்

சேலம், கள்ளக்குறிச்சியில் ஜன.4, 5-இல் அதிமுக பொதுக்கூட்டம் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு

சேலம், கள்ளக்குறிச்சியில் ஜன.4, 5 ஆகிய தேதிகளில் நடைபெறும் அதிமுக பிரசார பொதுக் கூட்டங்களில் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்கிறாா்.
Published on

சேலம், கள்ளக்குறிச்சியில் ஜன.4, 5 ஆகிய தேதிகளில் நடைபெறும் அதிமுக பிரசார பொதுக் கூட்டங்களில் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்கிறாா்.

இதுகுறித்து அதிமுக தலைமை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறாா். ஜன.4-ஆம் தேதி மாலை சேலம் புகா் மாவட்டம் வீரபாண்டி சட்டப்பேரவைத் தொகுதியிலும், ஜன.5-ஆம் தேதி மாலை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிமுக மகளிா் அணி எழுச்சிப் பொதுக் கூட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறாா்.

இந்தப் பொதுக் கூட்டங்களில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சோ்ந்த கட்சியின் அனைத்து நிலை நிா்வாகிகள் கலந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com