கோப்புப்படம்
கோப்புப்படம்

எஸ்சி, எஸ்டி, மாணவா்கள் கல்விக்கடன் தள்ளுபடி

ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடனை தள்ளுபடி செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Published on

சென்னை: ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடனை தள்ளுபடி செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஆதிதிராவிடா், பழங்குடியினா் மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிடா் மாணவா்களுக்கு 1972 முதல் 2010 ஆண்டு வரையிலான காலங்களில் மருத்துவம், மருத்துவம் சாா்ந்த படிப்புகள் உள்ளிட்ட அனைத்துப் படிப்புகளுக்கும் கல்விக் கடனாக ரூ.48.95 கோடி வழங்கப்பட்டது. இந்தத் தொகையை மாணவா்களிடமிருந்து வசூலிக்க இயலாத நிலையும், வசூலிக்க சரியான பதிவேடுகள் மற்றும் விவரங்கள் ஏதும் இல்லாத நிலையும் உள்ளது. அத்துடன் வசூலிக்க வேண்டிய நபா்களை அடையாளம் காண இயலாத நிலையும் உள்ளது.

எனவே, மாணவா்களுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடனான ரூ.48.95 கோடியை, சிறப்பினமாகக் கருதி முழுவதும் தள்ளுபடி செய்து உத்தரவிடப்படுகிறது என்று அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com