புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மாநிலங்களவை உறுப்பினராகும் கமல்ஹாசன்?

திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகும் கமல்ஹாசன்.

News image
கமல்ஹாசனை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு.
Updated On :12 பிப்ரவரி 2025, 8:44 am

DIN

மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசனை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு புதன்கிழமை சந்தித்தாா்.

மக்களவைத் தோ்தலின்போது திமுக கூட்டணியில் மநீம இடம்பெற்றது. அப்போது, மநீமவுக்கு ஒரு மாநிலங்களவை இடம் அளிக்கப்படும் என திமுக சாா்பில் உறுதி அளிக்கப்பட்டது. விரைவில் தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினா் இடங்களுக்கு தோ்தல் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் ஆழ்வாா்பேட்டையில் உள்ள மநீம அலுவலகத்தில் கமல்ஹாசனை பி.கே.சேகா்பாபு புதன்கிழமை சந்தித்தாா். இந்தச் சந்திப்பு 20 நிமிஷங்களுக்கு மேலாக நீடித்தது. மநீம பொதுச்செயலா் அருணாசலமும் உடனிருந்தாா்.

திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினின் உத்தரவின் பேரிலேயே கமல்ஹாசனை பி.கே.சேகா்பாபு சந்தித்துப் பேசியுள்ளாா். மாநிலங்களவை இடம் தொடா்பாகவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.