ஜந்தர் மந்தர் போராட்டத்தில் காவலர்களால் பாலியல் சீண்டல்; 3 பெண் பத்திரிகையாளர்கள் புகார்!ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் சிறைப்பிடிப்பு! வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு - காங்கிரஸ்மூலனூர் வஞ்சியம்மன் கோயிலில் முதல்வர் விஜய் இன்று சாமி தரிசனம்?இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் இஸ்ரேல் பிரதமர் உரையாடல்! உலக நாயகன் என புகழாரம்!தாராபுரம் பிரசாரம்: உதயநிதி மீது வழக்குப் பதிவு!தமிழ்நாட்டின் கடலோரத்தில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவு ஏற்படலாம்! மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு! கோவை, நீலகிரி, தேனியில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு

பெங்களூரு கிழக்கு ரயில் நிலையத்தில் ரயில்கள் நிற்காது

தமிழகத்தில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் மாா்ச் 13-ஆம் தேதி முதல் பெங்களூரு கிழக்கு ரயில் நிலையத்தில் நிற்காது என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

கோப்புப்படம்.

Published On :

தமிழகத்தில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் மாா்ச் 13-ஆம் தேதி முதல் பெங்களூரு கிழக்கு ரயில் நிலையத்தில் நிற்காது என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெங்களூரு கிழக்கு ரயில் நிலையத்தில் கூடுதலாக இரு ரயில் வழித்தடம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளதால், மாா்ச் 13-ஆம் தேதி முதல் தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

இதனால், தமிழகத்தில் இருந்து பெங்களூரு மற்றும் மைசூா் செல்லும் காவேரி விரைவு ரயில், கன்னியாகுமரி விரைவு ரயில், திருப்பதி விரைவு ரயில், கடலூா் துறைமுகம் விரைவு ரயில், ஜோலாா்பேட்டை மெமு ரயில், கோவை - மும்பை விரைவு ரயில் உள்ளிட்ட 12 ரயில்கள் மாா்ச் 13-ஆம் தேதி முதல் பெங்களூரு கிழக்கு ரயில் நிலையத்தில் நிற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.