ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு!

சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதைப் பற்றி...

News image

சோழவந்தான் ரயில் நிலையத்தில் அழிக்கப்பட்ட ஹிந்தி எழுத்துகள்.

Updated On :22 ஜூலை 2026, 2:08 pm IST

சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துக்களை அழித்து பிரதமர் மோடி, தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி சுவர்களில் எழுதப்பட்ட வாசகங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் ரயில் நிலையம் மிகவும் பிரபலம். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் ரயில்கள் மதுரைக்குச் செல்வதென்றாலும், திருநெல்வேலி, தூத்துகுடி சென்வதென்றாலும் சோழவந்தான் ரயில் நிலையத்தைக் கடந்துதான் செல்கின்றன.

வந்தேபாரத், பாண்டியன், அந்தியோதயா போன்ற ரயில்கள் இங்கு நின்று செல்லவதில்லை என்றாலும், வைகை போன்ற ஒரு சில முக்கிய ரயில்கள் நின்று செல்கின்றன. நாளைக்கு சுமார் 1,000-க்கும் மேற்பட்ட பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

நாள்தோறும் 50-க்கும் மேற்பட்ட ரயில்கள் சோழவந்தான் ர்நிலையத்தை கடந்து செல்லக்கூடிய நிலையில் பாண்டியன், வந்தே பாரத், அந்தியோதயா உள்ளிட்ட பல்வேறு ரயில்கள் சோழவந்தான் ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்கிறது. இதுபற்றி பொதுமக்கள் பலமுறை ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

ரயில்கள் நின்று செல்லாவிட்டாலும், பிரதமர் நரேந்திர மோடியின் அம்ரூத் பாரத் திட்டத்தின் கீழ், சோழவந்தான் ரயில் நிலையம் சமீபத்தில் புதுபிக்கப்பட்டு, நடைமேடை, மின் தூக்கி வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தில்லியில் நடைபெற்று வரும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், மதுரை சோழவந்தான் ரயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் உள்ள ஹிந்தி எழுத்துகளை செவ்வாய்க்கிழமை இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் கருப்பு மை கொண்டு அழித்துள்ளனர்.

மேலும், அந்த பலகையின் அருகிலேயே, ‘நரேந்திரரே பதவி விலகு, தர்மேந்திர பிரதான் பதவி விலகு, பாண்டியன், அந்தியோதயா, பொதிகை வண்டியை சோழவந்தானில் நிறுத்து’ என்று தமிழிலும், BAN NEET என்று ஆங்கிலத்திலும் எழுதியுள்ளனர்.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ரயில் நிலைய ஊழியர்கள் வெள்ளை பெயின்ட் கொண்டு அதை மறைத்தனர். இதை எழுதியவர்கள் யார்? என்பது குறித்து ரயில்வே காவல் துறை அதிகாரிகள் மற்றும் சோழவந்தான் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுத்துவரும் சூழலில், இதுபோன்று ஹிந்தி எழுத்துகள் அழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Summary

Amid nationwide protests by student organisations against the NEET examination and the alleged irregularities in its conduct, unidentified persons defaced the Hindi lettering on railway name boards at the Sholavandan railway station in Madurai district on Tuesday night

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.