ஏ.ஆர். ரஹ்மானின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ள முன்னாள் மனைவி சாய்ரா பானு!
ஏ.ஆர். ரஹ்மானின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் முன்னாள் மனைவி சாய்ரா பானு


மருத்துவ அவசரநிலையை சந்தித்தபோது, ஆதரவு அளித்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவரது முன்னாள் மனைவி சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.
நாட்டின் புகழ்பெற்ற பின்னணி இசைக் கலைஞர் ஏ.ஆர். ரஹ்மான் - சாய்ரா பானு தம்பதி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விவகாரத்துப் பெற்றுத் தனித்தனியே வாழ்ந்து வருகிறார்கள்.
29 ஆண்டு கால திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தில், ரஹ்மானின் லட்சோப லட்ச ரசிகர்களுக்கும் வருத்தம் தான்.
இந்த நிலையில், இருவருமே ஒருவரை ஒருவர் எந்த குற்றச்சாட்டுகளையும் சுமத்தால், புரளிகள் ஏதேனும் வந்தாலும் கூட அதனைக் கண்டித்தும், உண்மையல்ல, தங்களது தனிப்பட்ட சுதந்திரத்துக்கு மதிப்பளிக்கும்படியும்தான் கேட்டுவந்தனர்.
ில நாள்களுக்கு முன்பு, தான் மருத்துவ சிகிச்கையில் இருப்பதாக, சாய்ரா பானு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒரு சில நாள்களுக்கு முன்பு, சாய்ரா பானுவுக்கு மருத்துவ அவசர நிலை உருவாகி, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் உடனடியாக அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சாய்ரா பானுவின் தரப்பில் வழக்குரைஞர் வந்தனா என்பவர் வெளியிட்ட அறிக்கையில், சில நாள்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டதாகவும், இந்த நேரத்தில், உடல்நிலை குறித்து மட்டுமே தான் கவனம் செலுத்தி வருவதாகவும் தனக்கு உதவிய நண்பர்கள் மற்றும் வழக்குரைஞர் வந்தனா ஷா மற்றும் ரஹ்மானுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்களது அக்கறை மற்றும் ஊக்கத்துக்கு தான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...