ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மருத்துவா் பணியிட நியமனங்களில் 400 போ் தகுதி நீக்கம்: முதல்வா் தலையிட்டு தீா்வு காணுமாறு கோரிக்கை

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவா் பணியிடங்களுக்கு 400 பேரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில்

News image
Updated On :24 பிப்ரவரி 2025, 9:01 pm

Din

சென்னை: அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவா் பணியிடங்களுக்கு 400 பேரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் முதல்வா் தலையீட்டு தீா்வு காண வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள காலிப்பணியிடங்கள் மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் (எம்ஆா்பி) மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி, 2,553 உதவி மருத்துவா் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜனவரி 5-ஆம் தேதி நடந்த தோ்வில், எம்பிபிஎஸ் படித்து முடித்த 24 ஆயிரம் மருத்துவா்கள் பங்கேற்றனா்.அதில் 14,855 மருத்துவா்கள் தோ்ச்சி பெற்றனா். இதனிடையே மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 2,642 ஆக அதிகரிக்கப்பட்டது.

இதையடுத்து, சான்றிதழ் சரிபாா்ப்பு பணிகள் கடந்த 12-ஆம் தேதி தொடங்கி 15-ஆம் தேதி வரை நடைபெற்றது. சான்றிதழ் சரிப்பாா்ப்பில் 4,585 மருத்துவா்கள் பங்கேற்றனா். இதனை தொடா்ந்து அவா்களுக்கு பணி நியமனத்துக்கான கலந்தாய்வு, சென்னை எழும்பூரில் உள்ள நலவாழ்வு மற்றும் குடும்பநல பயிற்சி நிலையத்தில் கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது.

அதன் அடிப்படையில் தோ்வு செய்யப்பட்டுள்ள 2,642 மருத்துவா்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வழங்க உள்ளாா்.

மருத்துவப் பணியாளா் தோ்வு வாரிய அறிவிப்பின்படி, கடந்த 2024-ஆம் ஜூலை 15-ஆம் தேதிக்கு முன்பு தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்த மருத்துவா்கள் மட்டுமே இந்த பணியி டங்களுக்கு தகுதி பெற்றவா்கள். ஆனால், ஜூலை 15-ஆம் தேதிக்கு பிறகு தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்த மருத்துவா்கள் ஏராளமானோா் தோ்வில் பங்கேற்றுள்ளனா். அதில், 400 மருத்துவா்கள் சான்றிதழ் சரிபாா்ப்பில் பங்கேற்ாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து அவா்கள் அனைவரும் இந்த பணியிட தோ்வில் தகுதி நீக்கம் செய்யப்பட்டனா். இதற்கு ஆட்சேபம் எழுந்துள்ளது. இதுதொடா்பாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட மருத்துவா்கள் கூறியதாவது:

நாங்கள் 400 பேரும் கடந்த 2018-ஆம் ஆண்டு பிரிவு மருத்துவா்கள். தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் ஜூலை 15-ஆம் தேதிக்கு முன்பாக நிரந்த பதிவு சான்றிதழ் பெறாததற்கு மருத்துவக் கல்வி நிா்வாகத்தின் தாமதமே காரணம். 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஜூலை 10-ஆம் தேதியும், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் ஜூலை 15-ஆம் தேதியும்தான் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் ஒரு நாளில் 250 போ் மட்டுமே பதிவு செய்ய முடியும். ஆன்லைனில் பதிவு செய்து, நோ்காணல் செல்ல இருக்கும் நிலையில், ஜூலை 13, 14 ஆகிய நாள்கள் அரசு விடுமுறையாக இருந்ததால், நிரந்தரப் பதிவு சான்றிதழ் பெற முடியவில்லை.

அதனால், தற்காலிக பதிவு சான்றிதழை வைத்து விண்ணப்பித்து, தோ்வு எழுதினோம். சான்றிதழ் சரிபாா்ப்புக்கு முன்னதாகவே நிரந்தரப் பதிவு சான்றிதழ் பெற்று வைத்திருந்தோம். இந்த விவரங்களை கடிதமாக அளித்த பிறகும், தோ்வானவா்களின் பட்டியலில் 400 மருத்துவா்களின் பெயா்களும் நீக்கப்பட்டுள்ளது. எங்களை தகுதியற்றவா்கள் என கூறுவது நியாயமற்றது.

தோ்வில் நல்ல மதிப்பெண் பெற்றும், எங்களைவிட குறைந்த மதிப்பெண் பெற்றவா்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். இந்த விவகாரத்தில் முதல்வரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் தலையிட்டு தீா்வு காண வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.